Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் தனுஷின் அடுத்த அவரதாரம்....இசையமைப்பாளர் ரசிகர்கள் கோரிக்கை..!

madhankumar July 28, 2022 & 12:35 [IST]
நடிகர் தனுஷின் அடுத்த அவரதாரம்....இசையமைப்பாளர் ரசிகர்கள் கோரிக்கை..!Representative Image.

நடிகர் தனுஷ் இன்று தனது 39 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், இதனையொட்டி நடிகர் பிரசன்னா இதுவரை வெளியாகாத தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான "பவர் பாண்டி" படத்தில் நடித்திருந்த நடிகர் பிரசன்னா தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை வெளியிட்டு நடிகர் தனுஷ் அவரது இந்த பிறந்த நாளில், இன்னும் பெரிய உயரங்களையும், இன்னும் அதிகமான மகிழ்ச்சியை அடைய வாழ்த்துகிறேன். இதனை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை விட வேற என்ன அழகாக இருந்து விட முடியும்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம தலைவர் இவ்ளோ அழகா பியானோ வாசிக்குறாரே என பாராட்டி வருகின்றனர். மேலும் இதுவரை நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், என பல அவதாரங்களை எடுத்துள்ள தனுஷ் இசையமைப்பாளர் என்ற ஒரு மைல்கல்லையும் தொட வேண்டும், இசையமைப்பாளர் தனுஷை நாங்கள் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக, அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியாக உள்ள   ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இருந்து லைஃப் ஆப் பழம் பாடல்,  ‘நானே வருவேன்’ படத்திலிருந்து அப்டேட்டுடன் கூடிய போஸ்டர், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கும்  ‘வாத்தி’ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை இந்தப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்