Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எனக்கு மிகவும் பிடித்த கேம் இது! ரஜினி வெளியிட்ட புகைப்படம்..!

UDHAYAKUMAR July 28, 2022 & 11:20 [IST]
எனக்கு மிகவும் பிடித்த கேம் இது! ரஜினி வெளியிட்ட புகைப்படம்..!Representative Image.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு மிகவும் பிடித்த உள்ளரங்க விளையாட்டு இது என தான் செஸ் விளையாடும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். கூடவே செஸ் ஒலிம்பியாட் 2022 தொடரில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் செஸ் விளையாடும் புகைப்படத்தில் அவருக்கு வெள்ளை நிற காய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு யானை, ஒரு ராணி, ஒரு குதிரையுடன் போட்டியை நகர்த்திக்கொண்டிருக்கிறார். ராஜா எதிராளியின் கோட்டைக்குள் புகுந்து இருப்பது தெரிகிறது. இது சாதாரண விசயமல்ல என்பது செஸ் விளையாடுபவர்களுக்கு புரியும். செஸ் விளையாட்டில் ராஜா அவ்வளவு எளிதாக எதிராளி கோட்டைக்குள் நுழைய முடியாது. ராணிதான் மிக வேகமாக படையெடுத்து செல்வார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்