Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி போட்டி... சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் எப்ப வருது தெரியுமா?

UDHAYA KUMAR October 05, 2022 & 10:06 [IST]
தீபாவளி போட்டி... சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் எப்ப  வருது தெரியுமா?Representative Image.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தில் தமன் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தீபாவளி 2022 தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி தினத்துக்கு மூன்று நாள் முன்னதாக வரும் அக்டோபர் 21ம் தேதியே வெளியாகவுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி திங்கள் ஆகிய 4 நாட்கள் வசூலைக் கருத்தில் கொண்டு படம் 21ம் தேதி வெளியாகவுள்ளது. 

இதேநாளில், கார்த்தி நடிப்பில், மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வெளியாகவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்