Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Dhanush New Movie: தனுஷ்-க்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நாயகி? எந்த படத்தில் தெரியுமா?

madhankumar May 27, 2022 & 11:39 [IST]
Dhanush New Movie: தனுஷ்-க்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நாயகி? எந்த படத்தில் தெரியுமா?Representative Image.

நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழசினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன்வசம் பல படங்களை கையில் வைத்துள்ளார். அதில் ரிலீசுக்கு தயாராக 3 படங்கள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை தவிர, ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட படங்கள் கொரோன காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் அத்ராங்கி ரே படத்தை தவிர மற்ற இரண்டு படங்களும் சுமார்தான்.

திருச்சிற்றம்பலம்:

இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு படங்கள் வெளியாகவுள்ளன, அதில் வரும் ஜூலை 28 அதாவது நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் பெரும் ரசிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள "திருச்சிற்றம்பலம்" படம் வெளியாக உள்ளது. இதில் தனுஷுக்கு நாயகிகளாக பிரியா பவானி சங்கர், ராசிகண்ணா, நித்தியாமேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை தவிர பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாரதிராஜா, ஆகியோர் நடித்துள்ளனர்.

தி கிரே மேன்:

இதனையடுத்து தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான "தி கிரே மேன்" படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் கிரிஷ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நானே வருவேன்: 

அடுத்ததாக தனுஷ் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துமுடித்துள்ள படம் "நானே வருவேன்". இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து  இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை தவிர தனுஷ் தமிழ், மற்றும் தெலுங்கில் தயாராகும் "வாத்தி" படத்தில் நடித்து வருகிறார். வெங்கி அட்லுரி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கேப்டன் மில்லர்:

அடுத்ததாக நடிகர் தனுஷ் "ராக்கி" சாணிக்காயிதம்" ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக உருவெடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930களில் நடக்கும் பீரியட் பிலிம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வாத்தி படத்தை முடித்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டாக்டர்" மற்றும் "டான்" ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்