Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புஷ்பா-2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் ஸ்பாய்லர் வெளியீடு ரசிகர்கள் அதிர்ச்சி | Pushpa 2 Leaked Picture

Priyanka Hochumin Updated:
புஷ்பா-2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் ஸ்பாய்லர் வெளியீடு ரசிகர்கள் அதிர்ச்சி | Pushpa 2 Leaked PictureRepresentative Image.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் "புஷ்பா-2" படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. அது என்ன புகைப்படம், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தகவல் உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.

தெலுங்கு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்த படம் "Pushpa: The Rise". இப்படம் உலகளவில் 17 டிசம்பர் 2021 அன்று வெளியானது. யாரும் எதிர்பார்க்காத அளவில் படம் பைசா வசூலில் புதிய சரித்திரத்தை படைத்தது. அப்போது முதல் ரசிகர்கள் எப்போது புஷ்பா பாகம் 2-ஐ வெளியிடுவார்கள் என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சமீபத்தில் பாகம் 2 இல் அல்லு அர்ஜுனின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அது ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்த தருணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புகைப்படம் ஒன்று திடீரென்று சோசியல் மீடியாவில் வைரலாக ஆரம்பித்தது. அதில் பெண் ஒருவர் மரணித்து கீழே விழுந்தது போன்று காட்சியளிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதனை புஷ்பா-2 படத்தின் போஸ்டர், அதில் இருப்பது ராஷ்மிகா என்று வதந்திகளை கிளப்பி ஷேர் செய்ய தொடங்கினர். என்னடா இது படத்தின் முக்கிய சீனை இப்படி வெளியிட்டால் படத்தின் மீது எதிர்பார்ப்பு குறைந்து விடுமே என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்த வதந்திகளுக்கு எண்டு கார்டு போட வேண்டும் என்று விளக்கம் அளித்தனர் படகுழுவினர். அந்த போஸ்டர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கிய மராத்தி படத்தின் தலைப்பு 'நய் வரன் பட் லோஞ்சா கோன் நய் கொஞ்சா' படத்திற்கு சொந்தமானது. அதற்கும் புஷ்பா-2 படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தனர். இதற்கு பின்னர் தான் ரசிகர்களுக்கு உயிரே வந்தது, நல்ல வேளை பாடத்தின் ஸ்பாய்லர் எதும் வெளியாகவில்லை என்று நிம்மதியடைந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்