Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

puthuputhu arthangal சீரியலில் சினிமாவை நுழைக்கும் புதிய முயற்சி! ஆர்ஜே பாலாஜியின் அதிரடி யுக்தி!

UDHAYA KUMAR June 14, 2022 & 17:24 [IST]
puthuputhu arthangal சீரியலில் சினிமாவை நுழைக்கும் புதிய முயற்சி! ஆர்ஜே பாலாஜியின் அதிரடி யுக்தி!Representative Image.

விக்ரம் படத்தை கமல்ஹாசன் உலகம் முழுக்க சுற்றி விளம்பரம் செய்தது அவருக்கு எந்த அளவுக்கு உதவியது என்பதை தமிழகத்தில் யாரும் அறியாமல் இல்லை. 300 கோடி அளவுக்கு எக்கச்சக்க வசூல், இன்னமும் ஹவுஸ் ஃபுல் புக்கிங் போய்க்கொண்டிருக்கிறது.  இதனால் இந்த வாரம் வெளியாக வேண்டி காத்திருந்த இரண்டு படங்களில் ஒன்று பின்வாங்கியுள்ளது. 

ஹரி இயக்கத்தில் யானை மற்றும் போனி கபூர் தயாரித்துள்ள ரீமேக் படமான வீட்ல விஷேசம் ஆகிய இரண்டு படங்களும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கவேண்டிய படங்களாகும்.  இதில் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் அடுத்த மாதத்துக்கு தள்ளிப்போயுள்ளது. இன்னொரு படமான வீட்ல விசேங்க மட்டும் சோலோவாக ரிலீஸ் ஆகவுள்ளது. 

விதவிதமாக விளம்பரம் செய்யும் பாணியில் வித்தியாசமாக ஒன்றை செய்துள்ளது வீட்ல விஷேசங்க திரைப்படத்தின் ஆர் ஜே பாலாஜி. வழக்கமான பேட்டி, கேள்விகள், ராபிட் பஃயர் என மொக்கையான விசயங்களைத் தவிர்த்து வேறு என்ன செய்யலாம் என யோசித்த ஆர்ஜே பாலாஜி, சீரியலில் நடிக்கலாம் என்றே முடிவு செய்துவிட்டார். 

இவர் மட்டுமின்றி,  ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் இந்த சீரியலில் இணைந்து நடிக்கிறார்கள்.  வரும் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது வீட்ல விஷேசம் திரைப்படம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்