Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாரதி கண்ணம்மா பாரதியின் காதலி ராஜா ராணி 2 அர்ச்சனா? காருக்குள்....... கசிந்த புகைப்படம்

Udhaya Kumar July 05, 2022 & 12:09 [IST]
பாரதி கண்ணம்மா பாரதியின் காதலி ராஜா ராணி 2 அர்ச்சனா?  காருக்குள்....... கசிந்த புகைப்படம்Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு முதல் மிக சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மா மற்றும் பாரதியின் அழகிய ரொமான்ஸ் காட்சிகளும், கண்ணம்மாவின் துணிச்சலான காட்சிகளும் மிகப் பிரபலம். இதனால் இந்த சீரியலுக்கு தொடர்ச்சியான பல நேயர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். 

பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்திருந்தார்கள். கறுப்பாக பிறந்த பெண்ணுக்கு எதுவுமே கிடைக்காத போது, அவளின் திருமண வாழ்க்கை அவளை புரிந்துகொண்ட ஒருவனால் மிகச் சிறப்பாக கிடைத்திருக்கு, இடையில் சந்தேகம் என்ற கொடூரன் வந்தால், அதுவும் மனைவியின் நடத்தை மீதே என்றால் எப்படி இருக்கும், குடும்பம் சிதைந்துவிடுமல்லவா... அதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் பாரதி கண்ணம்மாவில். கண்ணம்மா ரோஷினி இடையில் விலக, அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமான வினுஷா அந்த வேடத்தில் நடித்து வருகிறார். 

பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் அருண் பிரசாத்தும் ராஜா ராணியில் நடிக்கும் அர்ச்சனாவும் காதலிப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனாலும் இதுகுறித்து அவர்கள் பேசவோ ஒன்றாக புகைப்படம் எடுத்து வெளியிடவோ இல்லை என்பதால் பெரிய அளவில் சூடு பிடிக்கவில்லை. ஆனால் தற்போது காருக்குள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

அந்த புகைப்படம்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்