Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஜினிக்கு ஜோடியாக தமன்னாவா? என்ன சொல்றீங்க...?

UDHAYAKUMAR August 11, 2022 & 11:44 [IST]
ரஜினிக்கு ஜோடியாக தமன்னாவா? என்ன சொல்றீங்க...?Representative Image.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஜோடி இல்லை என கூறப்படுகிறது. ரஜினி ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும், தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனவும் விளக்கம் தருகின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர். 

ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளதாகவும், படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரத்திடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா இந்த படத்தில் இருந்தாலும் அவர் ரஜினிக்கு ஜோடி இல்லை, அநேகமாக வில்லனின் மகளாக அவர் நடிக்கிறார் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. 

ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கிவிட்டதால், நெல்சனிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர். ஆகஸ்ட் 15ம் தேதி ஜெயிலர் படத்தின் முதல் அப்டேட் வெளியாகும் எனவும் அது ஆன் போர்டு அப்டேட்டாக இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். 

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்குகிறார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவ ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்