Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தந்தை ரஜினிகாந்த்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Sekar November 05, 2022 & 11:52 [IST]
மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தந்தை ரஜினிகாந்த்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!Representative Image.

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சினிமா வீரன் என்ற ஆவண படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பின்னர் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார்.

தற்போது லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் என இரண்டு ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கும் நிலையில், ஐஸ்வர்யாவின் தந்தையான நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

முன்னதாக லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்த ஒரு ட்விட்டர் பதிவில், இன்று காலை 10.30 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக கூறியிருந்த நிலையில், லால் சலாம் படம் குறித்த அதிகாரப்பூர்வ்ஸ் அறிவிப்பை வெளியிட்டு, மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தந்தை ரஜினி நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளது.

படத்தின் அறிவிப்பு குறித்த போஸ்டரில் கிரிக்கெட் ஹெல்மெட் ஒன்று எரியும் நிலையில் கிடப்பதால், இந்த படம் கிரிக்கெட் தொடர்பாக இருக்கும் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்