Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஜினி - கமல் - லோகேஷ்! அடுத்த அறிவிப்பு இதாதான் இருக்கப்போகுது!

UDHAYA KUMAR June 09, 2022 & 14:05 [IST]
ரஜினி - கமல் - லோகேஷ்! அடுத்த அறிவிப்பு இதாதான் இருக்கப்போகுது!Representative Image.

ரஜினி சம்மதித்தால் அவருடன் சேர்ந்து நடிக்க நான் தயார் என அறிவித்துள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன். இதனால் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் இவர்களது திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரும் இருக்கிறார்கள் என்பதால் படம் வேற லெவலுக்கு ஹைப் ஆனது. மேலும் சர்ப்ரைஸாக வைத்திருந்த சூர்யாவின் கேமியோ கடைசி நேரத்தில் ரிவீல் ஆகி அதுவும் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. 

இந்த படத்தின் வெற்றி அறிவிப்பு பிரஸ் மீட் சென்னையில் நடந்த நிலையில், அதில் பேசிய கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, ரஜினியுடன் இணைந்து படம் பண்ணுவீர்களா என்பதுதான்.  அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், முதலில் ரஜினி இதற்கு சம்மதம் தெரிவிக்கவேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து லோகேஷிடம் பேச வேண்டும். அதன் பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். நிச்சயம் எனக்கு ரஜினியுடன் சேர்ந்து படம் செய்ய விருப்பம் இருக்கிறது என்பதை தெரிவித்தார் கமல்ஹாசன். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்