Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பாக்யலட்சுமி தொடரிலிருந்து விலகும் ராதிகா?

UDHAYA KUMAR Updated:
பாக்யலட்சுமி தொடரிலிருந்து விலகும் ராதிகா? Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார் ராதிகா. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலட்டி. இவர் மக்களிடையே நன்கு பிரபலமாகி வருகிறார். 

சின்னத் திரை தொடர்களில் பாக்கியலட்சுமி தொடருக்கும் அதில் நடிக்கும் பாக்யா, ராதிகா இருவரது கேரக்டர்களுக்கும் மிக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு கிடைத்து வரும் வரவேற்பை கொண்டு மற்ற தொடர்களை விட இந்த தொடருக்கு அதிக டிஆர்பி கிடைக்கிறது. 

ஸ்டார் ஜல்சா எனும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி எனும் பெங்காலி தொடரின் ரீமேக் தான் இந்த தொடர். தொடரின் நாயகனாக கோபியின் இரண்டாவது மனைவியாக முன்னாள் காதலியாக நடிக்கிறார் ரேஷ்மா. 

இந்நிலையில்,  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் ஒன்றில் வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இதனால் அந்த தொடரில் நடிக்க சென்றார் என்றால் இந்த தொடரிலிருந்து விடைபெறுவார் என்பதே தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்