Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆர் ஜே பாலாஜியின் ரன் பேபி ரன்...! அசத்தலான டிரெய்லர்!

UDHAYA KUMAR Updated:
ஆர் ஜே பாலாஜியின் ரன் பேபி ரன்...! அசத்தலான டிரெய்லர்!Representative Image.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. காமெடியனாக சினிமாவில் அறிமுகமாக இப்போது தனக்கென தனி ரூட்டைப் பிடித்து சென்றுகொண்டிருக்கும் பாலாஜி, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக படத்தைத் தாங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.  இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையதளம் முழுக்க இந்த படம் பற்றிய பேச்சுத்தான் நிரம்பி கிடக்கிறது. 

வரும் பிப்ரவரி 3ம் தேதி  திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது.  மர்மமாக நடந்த ஒரு கொலையில் ஆர் ஜே பாலாஜி சிக்கிக் கொள்கிறார். அந்த கொலையை செய்தது யார், கொலை செய்யப்பட்டது யார், எப்படி சிக்கினார், எப்படி தப்பிப்பார் என்பதை கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்களாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்