Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

7 நாட்களில் 210 கோடி எப்படி ? திருப்பூர் சுப்ரமணியனின் கணக்கு இதோ!

UDHAYA KUMAR Updated:
7 நாட்களில் 210 கோடி எப்படி ? திருப்பூர் சுப்ரமணியனின் கணக்கு இதோ!Representative Image.

வாரிசு படம் வெளியாகி 7 நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதனை வாரிசு படத்தின் தமிழக விநியோகஸ்தர் லலித் டுவிட்டரில் அறிவித்திருந்த நிலையில், திருப்பூர் சுப்ரமணியம் இது 200 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார். 

வாரிசு படத்தை சீரியல் போல இருப்பதாக வந்த விமர்சனத்தால் இயக்குநர் வம்சி காண்டாகிவிட்டார். தானும் தளபதி விஜய்யும் தியாகங்கள் செய்ததாக கூறி அமர்க்கப்படுத்தியவரை வச்சி செய்துவிட்டனர் நெட்டிசன்கள். இதனால் கொஞ்சம் அமைதி காத்தவர்கள், அடுத்து 210 கோடி வசூலை உலகம் முழுக்க பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 

அதேநேரம் முதல் நாள் வசூலை விட 6வது நாள் வசூல் அதிகமாக இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இதனால், 
அதெப்படி வெறும் 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூல் வரும் என சீறி எழுந்துள்ளார் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம். 

லலித் வாங்கியுள்ளது தமிழக உரிமை மட்டுமே. அதிலும் 5 முக்கிய பகுதிகளை ரெட் ஜெயண்டிடம் கொடுத்துவிட்டார். இதுபோக மீதியுள்ள பகுதிகளின் வசூல் நிலவரங்கள் வேண்டுமென்றால் (இப்போதைக்கு அவர் வைத்துள்ள பகுதிகளின் நிலவரம் மட்டுமே) தெரிந்து கொள்ள முடியும்.  அதுவும் உடனடியாகவெல்லாம் தெரியாது. அதற்கு சில நாட்கள் ஆகும். 

வெளிநாட்டு உரிமையைப் பெற்றது வேறொரு நிறுவனம். அப்படியானால் ஒரு வாரம் கழித்துதான் இதன் நிலவரம் தெரியவரும்.  அதெப்படி ஒரே நாளில் கடந்த 7 நாட்களுக்கான நிலவரம் தெரியவந்தது என கேள்வி எழுப்பியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்