Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

கோல்டன் குளோப் விழாவில் RRR படக்குழு!

UDHAYA KUMAR Updated:
கோல்டன் குளோப் விழாவில் RRR படக்குழு!Representative Image.

உலகின் மிகப் பெரிய  சினிமா விழாக்களில் ஒன்றான கோல்டன் குளோப் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் வெளியான RRR திரைப்பட குழு கலிபோர்னியா சென்றுள்ளது. 

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய படம் RRR திரைப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வரும் ஜனவரி 11ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த விருது விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். நாட்டு நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் வகையிலும் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு பட பிரிவிலும் கலந்துகொள்ள இருக்கிறது.  கோல்டன் குளோப் விருது பரிந்துரை பட்டியிலில் இருக்கும் இந்த படத்துக்கு நிச்சயம் ஒரு விருதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2023 ஆஸ்கர் விருது நிகழ்விலும் இந்த படம் 14 பிரிவுகளில் கலந்துகொள்ள இருக்கிறதாம்.  ஆஸ்கருக்கு முன்னர் நடைபெறும் விருது விழாக்களில் கோல்டன் குளோப் சிறந்த விருதாகும். 

பெவர்லி ஹில்டனில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இந்திய நேரப்படி இந்த நிகழ்வு நடைபெறவிருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை