Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

தெறிக்கவிடும் தோட்டாக்களுடன் வெளிவந்த பத்து தல டீசர்..! | Pathu Thala Teaser

Gowthami Subramani Updated:
தெறிக்கவிடும் தோட்டாக்களுடன் வெளிவந்த பத்து தல டீசர்..! | Pathu Thala TeaserRepresentative Image.

டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன், சிம்பு மற்றும் கௌதம் மேனன் நடித்த திரைப்படமான பத்து தல படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் டீசர் வெளியானதும், ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியதாக உள்ளது.

தெறிக்கவிடும் தோட்டாக்களுடன் வெளிவந்த பத்து தல டீசர்..! | Pathu Thala TeaserRepresentative Image

இந்தப் படமானது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்க உள்ளார். மேலும், இந்தப் படமானது 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடிப்பில் வெளிவந்த கன்னட சினிமாவின் மஃப்டி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் ஏஜிஆர் எனும் டான் கதாபாத்தியத்தில் சிம்பு நடித்துள்ளார்.
 

தெறிக்கவிடும் தோட்டாக்களுடன் வெளிவந்த பத்து தல டீசர்..! | Pathu Thala TeaserRepresentative Image

மேலும், இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவனி சங்கர், கலையரசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில், அதிக அளவிலான பார்வையாளர்களைக் கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்