Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

salaar movie 2023ல் வெளியாகிறது சலார் திரைப்படம்....! வந்தது அப்டேட்!

UDHAYAKUMAR August 15, 2022 & 13:04 [IST]
salaar movie 2023ல் வெளியாகிறது சலார் திரைப்படம்....! வந்தது அப்டேட்!Representative Image.

கே.ஜி.எஃப். சீரிஸின் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் பாகுபலி சீரிஸ் நாயகன் பிரபாஸ் இணையும் புதிய படமான சலார் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

கே.ஜி.எஃப். 2 படத்தின் பிரமாண்ட வெற்றி அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் மீதான எதிர்பார்ப்பு  ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த இந்த திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் சலார் படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்று இப்படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 12.58-க்கு படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்த படத்தின் இயக்குனர் மற்றும் பாகுபலி ஹீரோ பிரபாஸ் இணைந்திருப்பதால் சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. ஏற்கனவே சலார் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், சலார் திரைப்படம் வரும் 2023ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்