Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thalapathy 67 -ல் அவர் இல்லையாம்! எல்லாமே புரளியாம்...!

Udhaya Kumar July 21, 2022 & 10:09 [IST]
Thalapathy 67 -ல் அவர் இல்லையாம்! எல்லாமே புரளியாம்...!Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க மிகப் பெரிய வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது. படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும், ஓடிடியில் வெளியாகி 2 வாரங்களைக் கடந்தும், இன்றும் சில திரையரங்குகளில் 1 அல்லது 2 காட்சிகளில் தினமும் திரையிடப்பட்டு வருகிறது. இப்படி ஒரு சாதனைத் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் சமந்தா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் கீர்த்தி ஷெட்டி, பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா ஆகியோரில் ஒருவரும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இவை அனைத்துமே பொய் என்பது தெரியவந்துள்ளது. 

சமந்தா இந்த படத்தில் விஜய்க்கு எதிராக வில்லியாக நடிக்கவிருப்பதாகவும் அதற்காக பெரிய தொகை பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒரு கதாநாயகி இருக்கிறார் அவர் கீர்த்தி ஷெட்டி, பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா ஆகியோரில் ஒருவராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது. இப்போதுதான் தெரியவந்துள்ளது அது புரளி என்று. 

வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்தை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் முடித்துவிட்டு சில நாட்கள் ஓய்வெடுக்க இருக்கிறாராம்.  வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, பிரபு, ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

தளபதி 66 படத்துக்கான டிரெய்லர் அறிவிப்பு மிக விரைவில் வரவுள்ளதாம். இதன் பிறகே தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

பொதுவாக லோகேஷ் படங்களில் கதாநாயகி இருக்க மாட்டார்கள். அப்படி கதாநாயகி இருந்தாலும் அவர் விஜய்க்கு ஜோடியாக இருக்க மாட்டார் எனவும், இது கேங்க்ஸ்டர் படம் என்பதையும் நமக்கு நினைவு கூர வேண்டியுள்ளது. கதாநாயகி என குறிப்பிடாமல் இந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் என குறிப்பிட்டால் சில நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்