Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
0.00sensex(0.00%)
நிஃப்டி23,537.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

பிக்பாஸில் கலக்கக் காத்திருக்கும் திருநங்கை ஷிவின் கணேசன்... யார் இந்த ஷிவின்...

NEWS TEAM October 12, 2022 & 12:30 [IST]
பிக்பாஸில் கலக்கக் காத்திருக்கும் திருநங்கை ஷிவின் கணேசன்... யார் இந்த ஷிவின்...Representative Image.

பிக் பாஸ் 6 வது சீசன் வழக்கமான கோலாகத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தொடர்கிறார். கடந்த சீசனில் நடந்தது போல, போட்டியாளர்கள் கமல்ஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியினால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். இதில், 16 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வீட்டிற்குள் 100 நாள்கள் தங்கியிருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், அதிகமான வாக்குகள் பெற்ற நபர்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்பர். குறைவான வாக்குகளைப் பெற்ற நபர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் வாக்குகளைப் பொறுத்து இறுதியில் மீதமுள்ள ஒருவரே பிக் பாஸ் வெற்றியாளராக கருதப்படுவர்.

அந்த வகையில், இந்த முறை கிரிக்கெட் வீரர், சீரியல் நடிகை, நடிகர்கள், உள்பட பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 100 நாட்களும் காதல், மோதல் என நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திருநங்கை ஷிவின் கணேஷன் பங்கேற்றது பேசு பொருளாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை பங்கேற்பது புதிதல்ல. கடந்த சீசனில், திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர், இந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். மேலும், மிஸ் ஈகுவாலிட்டி எனும் பியூட்டி பேஷன் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்று, தேர்வான முதல் திருநங்கை இவர் தான். இப்படி பியூட்டி ஷோக்களில் பிஸியாக இருந்த இவர், இந்தியா வர என்ன காரணம் தெரியுமா..?

இது குறித்து, ஷிவின் கணேஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது, “ஓவ்வொரு திருநங்கையும் தனது வாழ்க்கையின் எதிர் கொள்ளும் அதே சிக்கல்களைத் தான் நானும் சிறுவயது முதலே சந்தித்தேன். இந்தியாவில் இருந்தால், இந்த சமுதாயம் என்னை ஏற்றுக் கொள்ளாது என்ற பயத்தில் எனது தாயார் என்னை சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டார். ஆனால், தற்போது பாலினத்தை நேருக்கு நேராக சந்திக்க முடிவு செய்து இந்தியா திரும்பியுள்ளேன். இனி யாருக்காகவும் ஓடி ஒளிய போவதில்லை” என கூறினார்.

பிக்பாஸில் பங்கேற்கும் ஷிவின் கணேஷன் மாடல் மற்றும் நடிகை மட்டுமல்ல. இவர் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் நங்கை, நம்பி, ஈரர், திருநங்கைகளுக்கான போராளி. மேலும், இவர் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அறிவையும் புகட்டி வருகிறார். சமுதாயத்தில், திருநங்கைகளை இன்றளவும் வேற்று ஒரு மனிதர்களாக பார்க்கும் இந்த வேளையில், ஷிவின் கணேஷன் போன்றவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது, மக்களிடையே திருநங்கைகள் குறித்த புரிதலை அதிகப்படுத்தவும், அவர்களை சக மனிதராக பாவிக்கவும் உதவுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்