Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் பண்ண வேண்டிய ரோலில் சிம்பு! படம் இந்த வருசம் ரிலீஸ்!

UDHAYA KUMAR June 25, 2022 & 13:45 [IST]
அஜித் பண்ண வேண்டிய ரோலில் சிம்பு! படம் இந்த வருசம் ரிலீஸ்!Representative Image.

அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். தொடர்ந்து 3வது முறையாக இந்த கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் அடுத்தும் சில படங்கள் ஒரே பேனரில் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில்தான், தனக்கு வந்த ரீமேக் வாய்ப்பை நிராகரித்துள்ளார் அஜித் என்பது தெரியவந்துள்ளது. 

அதிகாரப்பூர்மில்லாத தகவலின்படி, மஃப்டி ரீமேக்கில் அஜித்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. அவரிடம் கேட்டபோது ஏற்கனவே ஹிந்தி ரீமேக்கான பிங்க் - நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்ததால், அஜித் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தமிழில் சிம்பு நடிக்க பத்து தல எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ள சிம்பு, விரைவில் பத்து தல படப்பிடிப்பில் இணைந்து கொள்வார்.  வெந்து தணிந்து காடு திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது.  இதைத் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்கும் சிம்பு, விரைவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்கவிருக்கிறார். 

பத்து தல படக்குழுவும் விரைவில் படத்தை முடிக்க துரிதமாக வேலை செய்துவருகிறது. சிம்பு போர்சன் தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாம். இதனால் நிச்சயமாக படம் டிசம்பரில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் இந்த படம் அஜித் நடிக்கவேண்டியது, இப்போது சிம்பு நடிக்கிறார் என கூறியுள்ளது நமக்கு கிடைத்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்