நடிகர் சிம்பு தனது டிவிட்டர் வலைத்தளத்தில் வெளியிடவுள்ள டீசர் குறித்து இப்போதே பேச்சு எழுந்து வருகிறது. கவுதம் கார்த்திக் நடிக்கும் ஆகஸ்ட் 16, 1947 எனும் புதிய படம் படு வேகமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசரைத்தான் இன்று மாலை 5 மணிக்கு சிம்பு வெளியிடவுள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக புதுமுக நாயகி ரேவதி நடிக்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் துணிச்சல் மிக்க வீரன் ஒருவன் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போரிடும் கதைதான் இந்த படம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…