Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஜினியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்! என்னென்ன நடக்கப்போகுதோ?

UDHAYA KUMAR May 30, 2022 & 12:28 [IST]
ரஜினியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்! என்னென்ன நடக்கப்போகுதோ?Representative Image.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான ஹீரோ என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரது திரைப்படங்களைப் பார்த்தே சிவகார்த்திகேயன் சிறு வயதிலிருந்தே வளர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களிலும் ரஜினியின் ரெபரன்ஸ் சீன்கள் வைத்திருப்பார். எப்போது பேட்டி எடுத்தாலும் ரஜினியைப் பற்றிய ஒரு கேள்வியாவது இடம்பெற்றுவிடும். அந்த அளவுக்கு ஃபேன் பாயான சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட்டுவிடுவாரா என்ன? 

தலைவர் 169 படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இவரது படங்களில் ஒரு பாடல் எழுதுவது சிவகார்த்திகேயனின் வழக்கமாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து எழுதி வந்த சிவகார்த்திகேயன் தளபதி விஜய் படத்தில் வரும் அரபிக் குத்து பாடலையும் எழுதியிருந்தார். அந்த பாடல் உலக அளவில் டிரெண்ட் ஆனது. இதனால் அடுத்து வரும் ரஜினிகாந்த் படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவது 100 சதவிகிதம் உறுதி. அதே நேரம் சிவகார்த்திகேயன் தலைவர் 169 படத்தில் சில நிமிட காட்சியிலாவது தோன்றி நடிப்பார் என ரசிகர்கள் ஆளாளுக்கு ஹைப்பை கிளப்பி வருகின்றனர்

சிவகார்த்திகேயன் சமீபத்தில் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ள நிலையில், அவரை கோலிவுட் திரையுலகம் வசூல் சக்ரவர்த்தியாக கொண்டாடுகிறது. ஏற்கனவே டாக்டர் திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதால், அவரின் அடுத்தடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்தான் ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  இது ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்