Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்! யார் கெத்து?

UDHAYA KUMAR May 30, 2022 & 22:08 [IST]
கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்! யார் கெத்து?Representative Image.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்கள் கார்த்தியும், சிவகார்த்திகேயனும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சிவகார்த்தியனை விட கார்த்தி சீனியர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இவ்விருவர்களது படங்களும் ஒரே நாளில் ரிலீசாகவுள்ளன. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டான் திரைப்படமும் சரி, அதற்கு முன் வெளியான டாக்டர் திரைப்படமும் சரி 100 கோடி கலெக்ஷனை அள்ளியது. இப்போது சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதே நாளில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்