இந்திய சினிமாவின் தூண்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ரகுமான், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி உலகம் முழுக்க பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் பொன்னியின் செல்வன். விக்ரம் படம் உலக அளவில் புரிந்த சாதனையை இந்த படம் முறியடித்தது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோரின் நடிப்பு தாண்டி இந்த படத்தில் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் தான்.
ரஹ்மானின் இசையில் அத்தனை பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து பலரின் மனதிலும் அலையடித்துக் கொண்டிருக்கிறது. தேவராளன் ஆட்டம் பாட்டில் வரும் பீட்களைக் கேட்டு மனம் துள்ளாட்டம் போடும் அனைவருக்குமே இது தெரியும். ஆனால் ஒரு விசயம் அனைவரது மனதையும் போட்டு துன்புறுத்திக் கொண்டிருந்தது.
படத்தில் சொல் பாடல் இல்லையே என்பதுதான் அது. இப்போது அந்த பாடலை யூடியூபில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…