Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

சன் டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக இந்த படம் போட காரணம் இதுதான்.. | Sun TV Tamil New Year 2023 Special Movies

Nandhinipriya Ganeshan Updated:
சன் டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக இந்த படம் போட காரணம் இதுதான்.. | Sun TV Tamil New Year 2023 Special MoviesRepresentative Image.

சன்டிவியில் வரும் தமிழ் புத்தாண்டு 2023 தின சிறப்பு திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு பண்டிகையிலும் புதுப்படங்கள் போடுவது வழக்கம் தான். ஆனால், தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் பொறுத்து படங்களின் லிஸ்ட் மாறும். முன்பெல்லாம், படம் தியேட்டரில் ரிலீஸாகி டிவியில் போடுவதற்கு கிட்டத்தட்ட 4 லிருந்து 5 மாதங்களாவது ஆகும். 

ஆனால், இப்போதெல்லாம் 2 மாதங்களிலேயே டிவியில் ஒளிப்பரப்படுகிறது. அந்தவகையில், வரும் தமிழ் புத்தாண்டு விடுமுறை நாளை முன்னிட்டு சன் டிவியில் சூப்பர் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. தமிழ் புத்தாண்டு மட்டுமல்லாமல், சன் டிவியின் 30 பிறந்தநாளும் அதே நாளில் வருவதால், மாஸான படங்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்ப முடிவெடுத்திருக்கிறார்கள் சன் டிவி நிர்வாகிகள். 

அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'வாரிசு' திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதற்கு முந்தின வருடங்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக பைரவா, பிகில், புலி உள்ளிட்ட படங்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வருடம் சிறப்பு படமாக குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு படத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்