Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் படங்களை குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்!

UDHAYA KUMAR Updated:
அஜித் படங்களை குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்!Representative Image.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறாராம். அதுவும் அஜித் நடிப்பில் வெளிவந்த படம்தான் என்கிறார்கள். 

அஜித் - சிறுத்தை சிவா இணைந்து கொடுத்தது மொத்தம் 4 படங்கள். அதில் வீரம் படத்தை கட்டமராயுடு எனும் பெயரில் ரீமேக் செய்தனர். அதில் அஜித் நடித்த வேடத்தில் நடித்தவர் பவன் கல்யாண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி. 

வேதாளம் படத்தை நடிகர் சிரஞ்சீவி தற்போது ரீமேக் செய்து வருகிறார். வேதாளம் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்களில் வருவார். அதில் ஒன்று மொட்டைத் தலையாக இருக்கும். அதற்காக சிரஞ்சீவியும் மொட்டை அடித்துள்ளார். இந்த படம் விரைவில் முடிக்கப்பட்டு திரைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. 

இந்நிலையில், மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க இருக்கிறாராம் சிரஞ்சீவி.  அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து பட்டையைக் கிளப்பிய விஸ்வாசம் திரைப்படத்தை சிரஞ்சீவி தெலுங்கில் செய்யவிருக்கிறாராம்.  இந்த படத்தை வி வி வினாயக் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்