Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூர்யா - பா.ரஞ்சித் இணையும் ஜெர்மன்...! அதற்கு முன்..?

UDHAYAKUMAR August 26, 2022 & 13:00 [IST]
சூர்யா - பா.ரஞ்சித் இணையும் ஜெர்மன்...! அதற்கு முன்..?Representative Image.

சூர்யாவுடன் இணைந்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படமாக ஜெர்மன் இருக்கும் எனவும் அதுதான் தனது கனவுப் படம் எனவும் கூறியுள்ளார் பா.ரஞ்சித். இந்த படம் பிரபல ஆங்கிலப் படமான DUNE போல கதையம்சம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

பா. ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் புரமோசனுக்காக இன்று கொச்சியில் முகாமிட்டிருக்கிறார் இயக்குநர். அவருடன் படத்தில் இடம்பெற்ற முக்கிய நடிகர்களும் இணைந்திருக்கிறார்கள். 

இந்நிலையில், பா ரஞ்சித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் சூர்யாவுடன் இணைவது குறித்து பேசியுள்ளார். ஜெர்மன் எனும் படம் மிகவும் வித்தியாசமான கதைக்களமாகவும் அதே நேரம் கிராஃபிக்ஸுக்கு உகந்த படமாகவும் இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

பா.ரஞ்சித்தின் கனவு படம் இது என்றாலும், அது உடனடியாக உருவாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதேநேரம், சூர்யாவுடன் இணைந்து வேறு ஒரு படம் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா, இருந்தால் இருவரும் இணைந்து ஒரு படம் தந்தால் நன்றாக இருக்கும் என சூர்யா ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்