Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் எவ்ளோ ஹேண்ட்ஸமா இருக்காரு..! 56 வயசுன்னா நம்ப முடியுதா?

UDHAYAKUMAR August 26, 2022 & 10:30 [IST]
விக்ரம் எவ்ளோ ஹேண்ட்ஸமா இருக்காரு..! 56 வயசுன்னா நம்ப முடியுதா?Representative Image.

கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்ரம் பற்றி தான் கோலிவுட்டே பேசிக் கொண்டிருக்கிறது. இன்றும் அவரின் இளமையின் ரகசியம் என்ன என பலரும் விவாதித்து வரும் சூழல்தான் நிலவுகிறது. காரணம் அவ்வளவு இளமையாக ஃபிரஷ்ஷாக இருக்கிறார் மனுசன். கோப்ரா படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ள விக்ரமுக்கு 56 வயது ஆகிவிட்டது என்றால் நம்பவே முடியவில்லை. 

வரும் ஆகஸ்ட் 31ம் தேதி உலகம் முழுக்க பல்வேறு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 4 பாடல்கள் வெளியாகி அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி உள்ளது. பட்டி தொட்டியெல்லாம் அதீரா அதிரா ஒலித்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் படங்களிலேயே மிக அதிக வசூலைப் பெறும் படமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது. 

இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது முந்தைய படங்களான டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் மூலம் தமிழக ரசிகர்களைப் பிடித்துவிட்டார். இதனால் ரசிக பட்டாளம் கொண்ட இயக்குநர்கள் பட்டியலில் அவருக்கும் இடமுண்டு. அவரின் ரசிகர்களே படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திருவிழா கோலம் கொள்ளும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

நேற்றைய விழாவில் விக்ரம் மிகவும் அழகாக கறுப்பு வெள்ளை பழுப்பு நிறம் கலந்து டீ சர்ட்டும், கறுப்பு நிற லென்த் பாண்ட்டும் போட்டிருந்தார். அவரின் நீண்ட தலைமுடி பா.ரஞ்சித் படத்துக்கான கெட்டப்பாக இருக்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்