Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராக்கெட்ரி படத்தில் சூர்யாவின் ரோல் இதுதான்! விக்ரம் ரோலெக்ஸைவிட கெத்தா?

UDHAYA KUMAR July 01, 2022 & 09:30 [IST]
ராக்கெட்ரி படத்தில் சூர்யாவின் ரோல் இதுதான்! விக்ரம் ரோலெக்ஸைவிட கெத்தா?Representative Image.

விக்ரம் படத்தில் சூர்யா ஏற்று நடித்த பாத்திரம் ரோலெக்ஸ். கொடூர அரக்கனாக கிளைமேக்ஸில் வந்து தனது என்ட்ரியைக் காட்டி செல்வார். அப்படி ஒரு பவர்ஃபுல்லான பர்ஃபாமன்ஸை தமிழ் இண்டஸ்ரி பாத்ததில்லை என பலரும் கூறி வியந்து வருகின்றனர். 

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் படம் முழுக்க வந்தாலும், கடைசியில் வந்து அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் சூர்யா. அதேபோல ஒரு கேமியோதான் மாதவன் எழுதி இயக்கி நடித்து இன்று வெளியாகியுள்ள ராக்கெட்ரி படத்திலும் செய்துள்ளாரா? சூர்யாவின் பாத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். 

சூர்யாவும் மாதவனும் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக கேட்டவுடன் ஓகே சொல்லி, சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் சூர்யா.  ஹிந்தி, ஆங்கிலத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பாத்திரத்தில்தான் சூர்யா நடித்திருக்கிறார். 

ஷாருக்கான் ஹிந்தியிலும் சூர்யா தமிழிலும் பத்திரிகையாளராக நடித்துள்ளனர். நம்பி நாராயணனிடம் பேட்டி எடுக்கும் கதாபாத்திரமாக பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறார் சூர்யா. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்