Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த வாட்ச்கள்லாம் அத்தனை கோடி ரூபாயா? | celebrity watch collections

UDHAYA KUMAR Updated:
இந்த வாட்ச்கள்லாம் அத்தனை கோடி ரூபாயா? | celebrity watch collectionsRepresentative Image.

தமிழகத்தில் வாட்ச் பிரச்னை பெரும்பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது. கைக்கடிகாரங்களின் விலையோ கோடிகளில் இருக்கிறது. நமக்கு தெரிந்ததெல்லாம் 500, 1000 ரூபாய்க்கான வாட்ச்கள். சில வாட்ச்கள் லட்சங்களில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நாம் அன்றாடம் பார்த்து ரசிக்கும் சில பிரபலங்கள் கோடிகளில் வாட்ச் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் கைக்கடிகாரங்களின் விலையைக் கேட்டால், அப்படி என்ன இதில் இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. வாருங்கள் இந்தியாவில் சில பிரபலங்கள் கட்டியிருக்கும் வாட்ச்களின் விலைகளைத் தெரிந்துகொண்டு வாயைப்பிளக்கலாம். 

ஹர்திக் பாண்ட்யா

 இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் 5 கோடிக்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் இருக்கின்றன. வாட்ச் பிரியரான இவர்  Patek Philippe Nautilus Platinum 5711 எனும்  INR 5 crore மதிப்பிலான வாட்ச் ஒன்றை வைத்திருக்கிறார். இன்னொரு வாட்ச் Patek Philippe Nautilus 5712R ன் விலை 1.65 கோடி ரூபாயாம். இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து வாட்ச் வாங்குவதில் அப்படி என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. 


விராட் கோலி 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரருமான விராட் கோலியிடம் INR 2 crores மதிப்பு கொண்ட Rolex Daytona Rainbow Everose Gold எனும் வாட்ச் இருக்கிறதாம். 


ரோஹித் சர்மா

Rs 10.7 lakh மதிப்பு கொண்ட Rolex Sky-Dweller வாட்சை தனது ஃபேவரைட்டான வாட்சாக வைத்திருக்கிறார் ரோஹித் சர்மா. இந்திய அணியின் கேப்டனான இவரிடம் இதுபோல இன்னும் பல லட்சம் மதிப்புகள் கொண்ட கைக்கடிகாரங்கள் இருக்கின்றன. 


கேஎல் ராகுல்


Rs 37.5 lakh மதிப்புள்ள ஒரு வாட்சை வைத்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல். இவரிடமுள்ள வாட்சின் பெயர் silver Patek Philippe Nautilus என்பதாகும். இதன் விலை மதிப்பு காரணமாக இது இந்தியாவிலேயே மிகச் சிலரிடம்தான் இருக்கிறது. 


தோனி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மோட்டிவேசனனா முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் Rs. 9.25 lakh மதிப்பிலான ஒரு  Panerai Radiomir California வாட்ச் இருக்கிறதாம். இத்துடன் இன்னும் பல வாட்ச்களை அவர் வாங்கி வைத்திருக்கிறார். 


ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்  Richard Mille RM 028 Automatic Rose Gold Diver எனும்  Rs 1.12 crores மதிப்பிலான வாட்ச் ஒன்றை வைத்திருக்கிறார். இது இவரது பரம்பரை சொத்தாக மிகவும் செண்டிமெண்ட்டாக வழக்கத்தில் இருக்கும் வாட்ச் ஆகும். லக்கி வாட்ச் கேட்டகிரியில் சில பிரபலங்கள் வைத்திருப்பார்கள். அந்த வகையிலான பொருள் இது என்கிறார் ரன்பீர் கபூர். 

இவரிடம் Audemars Piguet Roya எனும் பெயர் கொண்ட Rs 14 lakh மதிப்பிலான வாட்ச் ஒன்றும் இருக்கிறது. 

ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான்  Vacheron Constantin Overseas World Time எனும் மிகப் பிரபலமான அதீத மதிப்பு கொண்ட கைக்கடிகாரத்தை Rs 27.80 lakh செலவு செய்து வாங்கி வைத்திருக்கிறார். 


ரன்வீர் சிங்

Rs 40 lakh விலை மதிப்பிலான  Franck Müller V45 Vanguard Yachting Rose Gold and Diamond கைக்கடிகாரத்தை நடிகர் ரன்வீர் சிங் தன்னிடம் வைத்திருக்கிறார். இது இந்தியாவிலேயே மிகச் சிலரிடம் மட்டுமே காணப்படும் வாட்ச் ஆகும். 


ஷாருக் கான்

இந்த பட்டியலில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தன்னிடம் 10 லட்சம் மதிப்பிலான வாட்ச்சை வைத்திருக்கிறார். 

மோகன் லால்

பிரபல நடிகர் மோகன்லால் தன்னிடம் நிறைய விலைமதிப்புள்ள வாட்ச்களை வைத்திருக்கிறார். அவரிடம் Patek Philippe Aquanaut Travel Time வாட்ச் ஒன்று இருக்கிறது. அது 75 லட்சத்திலிருந்து 80 லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்டது.  Rolex Yacht-Master , Breguet tradition automatic, Richard Mille 11-03 McLaren என பல வாட்ச்களை வைத்திருக்கிறார் மோகன்லால்


கமல்ஹாசன் 

உலகநாயகன் கமல்ஹாசனிடம் இருந்த ரோலக்ஸ் வாட்ச் கிட்டத்தட்ட 47 லட்சம் மதிப்பு கொண்டது. இந்த வாட்சைதான் தனது தம்பி என அழைக்கும் நடிகர் சூர்யாவுக்கு பரிசாக அளித்தார் கமல். 


ராம் சரண்

தெலுங்கு நடிகர் ராம்சரண் தன்னிடம் 68 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட Patek Phillipe Nautilus Chronograph என்கிற வாட்சை வைத்திருக்கிறாராம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்