Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூர்யா - சிறுத்தை சிவா மூவி அப்டேட் ! சுட சுட வரப்போகுது...!

Udhaya Kumar July 07, 2022 & 16:48 [IST]
சூர்யா - சிறுத்தை சிவா மூவி அப்டேட் ! சுட சுட வரப்போகுது...!Representative Image.

நடிகர் சூர்யா தற்போது பாலா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இடையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தாமதமானாலும், மீண்டும் துவங்கும் என சூர்யாவே கூறியிருந்தார். 

பாலா படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறனின் வாடி வாசல் படத்தில் நடிப்பார் சூர்யா என நினைத்தால், அதற்கு தாமதமாகும் என கூறிவிட்ட நிலையில், தற்போது சிறுத்தை சிவாவுடன் சேர உள்ளார் சூர்யா. 

சிறுத்தை படத்தின் மூலம் புகழ் பெற்ற சிவா, அடுத்து அஜித்துடன் அடுத்தடுத்து 4 படங்களை இயக்கினார். விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரஜினியுடன் அடுத்த படத்தை எடுத்து, அனைவரும் கழுவி ஊற்றும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். அண்ணாத்த படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அடுத்த படம் எதுவும் கமிட் ஆகாத சிவா தற்போது சூர்யாவுடன் சேர உள்ளார் என கூறப்படுகிறது. 

சிறுத்தை சிவா இந்த படத்துக்காக கோவாவில் லொகேஷன் பார்க்கச் சென்றிருக்கிறாராம். இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைப்பது என முடிவில் இருக்கிறார் சிவா. 

சிறுத்தை சிவா - சூர்யா இணைவில் தொடங்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வரும் ஜூலை 23ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் அல்லது கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளாராம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்