Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷின் வாத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ப ரிலீஸ் தெரியுமா?

Udhaya Kumar July 07, 2022 & 15:06 [IST]
தனுஷின் வாத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ப ரிலீஸ் தெரியுமா?Representative Image.

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு. திருச்சிற்றம்பலம் குறித்த அப்டேட் வரும் என நினைத்து எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு உண்மையிலேயே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியான செய்திதான். தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த தகவல் அரசல் புரசலாக வெளிவந்துள்ளன. 

துருவங்கள் பதினாறு,  நரகாசூரன், மாஃபியா உள்ளிட்ட படங்களை எடுத்தவர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்ததால், அது ஓடிடியில் வெளியாகியும் பெரிய வரவேற்பை பெறவில்லை.  

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி கிட்டத்தட்ட எல்லா படங்களையும் முடித்துவிட்டார் தனுஷ். இன்னும் ஒரு சில வேலைகள் வாத்தி திரைப்படத்தில் பாக்கி இருக்கிறது. 

வரும் ஜூலை 22ம் தேதி  அவிக் சான் இயக்கத்தில் தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான், வாத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது. வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்