Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுழல் - சுழன்றடிக்கும் திரைக்கதையோடு புஷ்கர்-காயத்ரியின் அட்டகாச படைப்பு! கட்டாயம் பார்க்க வேண்டிய கதை!

UDHAYA KUMAR June 18, 2022 & 13:09 [IST]
சுழல் - சுழன்றடிக்கும் திரைக்கதையோடு புஷ்கர்-காயத்ரியின் அட்டகாச படைப்பு! கட்டாயம் பார்க்க வேண்டிய கதை!Representative Image.

மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் பழிக்குப் பழி கதை போலத்தான் இந்த தொடர் ஆரம்பிக்கிறது. காரணம் நேர்மைக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் ஏற்படும் மோதல்தான். அதிகாரம் தொழிலாளியின் குடும்பத்தை சீர்குலைக்க முயற்சிக்கும்போது, ஒரு சாதாரண உழைப்பாளி என்ன செய்வான். காவல்துறை என்ன செய்யும். இப்படி நிஜத்தில் நடக்கும் சம்பவம் போலவே ஒரு திரைக்கதையை காண சுழல் வெப் சீரிஸை காணலாம். 

தொழிற்சங்க லீடரான பார்த்திபனுக்கும் முதலாளியான ஹரிஷ் உத்தமனுக்கும் இடையே நடக்கும் கதைக்களமாக தொடங்கி, அடுத்தடுத்து குழந்தை கடத்தல், தேடுதல் வேட்டை, பழி பாவம் என தொடர்கிறது சுழல். 

தொழிலாளர்களின் உதவியுடன் சங்கத் தலைவனும்,  முதலாளித்துவத்தின் அடியாட்களாக காவலர்களும், அதில் சில நல்லவர்களும் இருக்கும் சாதாரண கதைதான். ஆனாலும் இதன் மேக்கிங்கில் வித்தியாசமாக காட்டியிருக்கிறார்கள். 

மகளைத் தொலைத்த தந்தை, தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் யூனியன் லீடர், தீவிர சித்தாந்தவாதியாக பார்த்திபன் நடித்துள்ளார்.  ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஸ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன் என அனைவருக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தந்துள்ளனர். 

வழக்கம்போல இதுமாதிரி சஸ்பென்ஸ் திரில்லர்களின் கிங் - குயின் நாங்கள் என நிரூபித்துள்ளனர் புஷ்கர் - காயத்ரி தம்பதி. 

KEYWORDS: 

suzhal web series review in tamil, suzhal web series release date, suzhal web series watch online, suzhal web series imdb, suzhal web series trailer, suzhal web series rating, suzhal web series ott platform, suzhal web series amazon prime, suzhal web series download tamilrockers, suzhal web series tamilrockers


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்