Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,743.11
-399.69sensex(-0.55%)
நிஃப்டி22,096.25
-116.45sensex(-0.52%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Serial: அபிக்கு ஒரு ஜோடி ரெடி...வெற்றிக்கு ஒரு ஜோடி ஓகே ஆகிடுச்சு! இப்ப இது யார்? இவங்க யாருக்கா இருக்கும்?

Priyanka Hochumin June 18, 2022 & 13:00 [IST]
Thendral Vanthu Ennai Thodum Serial: அபிக்கு ஒரு ஜோடி ரெடி...வெற்றிக்கு ஒரு ஜோடி ஓகே ஆகிடுச்சு! இப்ப இது யார்? இவங்க யாருக்கா இருக்கும்?Representative Image.

Thendral Vandhu Ennai Thodum Serial: இந்த வாரம் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் புதுசு புதுசா கேரக்டர்களை இருக்குறதுக்கான காரணம் இது தானா! இனி அடுத்து யார் என்னென்ன குட்டைய கிளப்ப போறாங்களோன்னு தெரியல.

இதுவரை நடந்தது | Vijay TV Latest Promo 

அபியை புரிந்துகொள்ளாமல் வேட்டை விட்டு வெளியேற்றிய வெற்றி, தற்போது அபியின் அன்பிற்காக ஏங்குகிறான். இவங்க ரெண்டு பேரும் எப்படியாவது சேரணும்னு நினைக்க, இவங்க ரெண்டு வீட்டிலையும் இவங்களுக்கு வேற வேற ஆளுகளுடன் கல்யாணம் நடத்தி வைக்க பாக்குறாங்க. இதுக்காகவே அபியின் அத்தை பையன் என்று சொல்லிட்டு, பாக்கியலட்சுமி சீரியல்ல நடிக்கும் எழில் களமிறங்கு இருக்காரு. அவர் யாருனு பாத்தா வெற்றியோடு கிளோஸ் பிரென்டாம். எப்படி போகுது பாருங்க கதை. அங்குட்டு வெற்றியை ராதாவுடன் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் தடபுடலா நடந்துட்டு இருக்குது.

அபி வீட்ல, வந்திருக்க அத்தை பையனை எப்படியாவது அபிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பிளான் பண்றாங்க. அவருக்கு அபி மீது ஆசை, ஆனால் அபி அதை எதுவும் கண்டுக்கல. பட் அபி சக்தி இருவரும் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்றாங்க. இதுல இவங்க ஒண்ணா போற இடத்துக்கெல்லாம், சக்தி வெற்றியை கூப்பிட்றான். ஏன்னா வெற்றி தான் இவங்களுக்கு தூது போல. இப்படியே போயிட்டு இருக்க, பூங்காவனம் வெற்றியோட அம்மாக்கு குடுத்த சாத்தியத்துக்காக வெற்றியை இனி அடிதடி, கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் பண்ண இப்படி எந்த வேலைக்கும் கூப்பிட்றத நிறுத்திட்டாரு. பிறகு வெற்றிக்கு சொந்தமாக ஒரு பெட்ரோல் பங்க் திறந்து வைக்க எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு இருக்காரு. இப்ப அபி வெற்றி இவங்க எல்லாத்துக்கும் நடுவுல மாட்டிட்டு குளிச்சிட்டு இருக்காங்க. வெற்றிக்கு இந்த கல்யாணம் புடிக்கல, அபி கூட சேர முடியல, பூங்காவனம் அண்ணன் எதுலையுமே சேத்துக்கல இப்படி எல்லாப்பக்கமும் ஒரே மன உளைச்சல்.

இன்றைய எபிசோடு | Thendral Vanthu Ennai Thodum Today Episode

இன்னைக்கு பாத்தா புதுசா ஒரு ஆளு வட நாட்ல இருந்து என்ட்ரி கொடுத்துருக்காரு. அவர் யாருன்னு பூங்காவனத்தோட அண்ணன் பையனாம். வந்த உடனே எப்படியும் போல பயங்கர பில்ட் அப் தான். அப்புறம் அபி வீட்ல மறுபடியும் அபிய சக்தியை கல்யாணம் பண்ண கன்வின்ஸ் பண்றாங்க. அபி யார்கிட்ட சொல்லறதுன்னு தெரியாம, அவ பெரியம்மாகிட்ட போய் சொல்லிட்டு அழுவுறா. எல்லாரும் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க, தாலிய கழட்டி போட்டுடலாம் ஆனா ஏன் மனசுல இருந்து வெற்றிய தூக்கிப் போடுட முடியுமான்னு ஏன் யாருமே யோசிக்க மாட்டேங்கிறாங்கன்னு தெரியல என்று அழுகிறாள்.

அப்புறம் பாத்தா பூங்காவனம், வெற்றிக்கும் ராதாக்கும் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்துறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. வெற்றி செம்ம கடுப்புல ராதா கூட நின்னிட்டு இருக்கான். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது. இப்ப எல்லாரும் ஏங்குறது, எப்ப தான் வெற்றியும் அபியும் சேருவாங்களோன்னு தான். ஒரு வேளை இதுக்கு தான் புதுசா ஆளுங்கள எறக்கி இருக்காங்களோ. என்ன நடக்குதுன்னு அடுத்த வாரம் பார்ப்போம்.

Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்