Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

தமிழும் சரஸ்வதியும் சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Vijay TV Thamizhum saraswathiyum Serial

Gowthami Subramani Updated:
தமிழும் சரஸ்வதியும் சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Vijay TV Thamizhum saraswathiyum SerialRepresentative Image.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓய்க் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஆகும். இது கடந்த 2021 ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவில், தமிழும் சரஸ்வதியும் சீரியல் குறித்த முக்கிய விவரங்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் விவரங்கள்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

தமிழும் சரஸ்வதியும்

வகை

நாடகம்

சேனல்

விஜய் டிவி

வெளியீடு

12 ஜூலை 2021 -
தற்போது

இயங்கும் நேரம்

19-22 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் வெள்ளி வரை

நேரம்

06:00 PM- 06:30 PM

உருவாக்கியவர்

எஸ்.குமரன்

எழுதியவர்

நந்தன் ஸ்ரீதரன் (எபிசோட் 1-90)

எஸ். மருது சங்கர் (எபிசோட் 91-278)

ஆல்வின் பிரசாந்த் ராஜ் (எபிசோட் 279-தற்போது)

திரைக்கதை

வி.கே.அமிர்தராஜ்

சி.உ. முத்துசெல்வன்

கதை

விகடன் கதைக்குழு

இயக்கம்

எஸ். குமரன்

கிரியேட்டிவ் இயக்குநர்கள்

பி. சீனிவாசன்

ராதிகா சீனிவாசன்

தீம்

நீயும் நானும் அன்பே

தீம் மியூசிக் இசையமைப்பாளர்

கிரன்

தயாரிப்பாளர்கள்

விகடன் டெலிவிஸ்டாஸ்

பி.ஸ்ரீனிவாசன்

ஒளிப்பதிவு

எஸ்.டி. மார்ட்ஸ்

எடிட்டர்

பி. சந்துரு

தயாரிப்பு நிறுவனங்கள்

விகடன் டெலிவிஸ்டாஸ் பிரைவேட் லிமிடெட்

நெட்வொர்க்

ஸ்டார் விஜய்

 

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

தீபக் தினகர்

தமிழரசன்

நக்ஷத்ரா

சரஸ்வதி

மீரா கிருஷ்ணா

கோதைநாயகி

ராமச்சந்திரன் மகாலிங்கம்

நடேசப்பெருமாள்

நவீன் வெற்றி

கார்த்திக்

விஜே சங்கீதா

வசுந்திரா தேவி

அஸ்ரிதா ஸ்ரீதாஸ்

ராகினி

ரேகா கிருஷ்ணப்பா

சந்திரகலா தேவி

கேபிஒய் யோகி

நமச்சிவாயம்

கயல் விழி

அபிதா

கணேஷ்

மாணிக்கம்

மெர்சி லேயல்

கீதா மாணிக்கம்

சைஃப்

ஆதித்யா

சைலு இம்ரான்

மதுமிதா

பிரபாகரன் சந்திரன்

சொக்கலிங்கம்

அனிதா வெங்கட்

வாசுகி சொக்கலிங்கம்

ஏ.ரேவதி

மீனாட்சி

மதன் பாண்டியன்

அருண்பிரசாத் சொக்கலிங்கம்

கோகிலா கோபால்

காவ்யப்ரியா

ராயன்

அர்ஜூன்

ஸ்வாதிகா செந்தில்குமார்

ஜெயந்தி

பாப் சுரேஷ்

பரமன்

உமா மகேஸ்வரி

மின்னல்

 

விஜய் டிவி சீரியல் தமிழும் சரஸ்வதியும் கதை

நடேசன் மற்றும் கோதை அவர்களின் மகன் தமிழ், கார்த்திக், மற்றும் ராகினி. இவர்களுள் தமிழும் சரஸ்வதியும் கதையின் நாயகனாக விளங்குபவர் தமிழ். கோதையின் அண்ணன் மகள் மதுமிதா. தமிழ், மதுமிதாவை சிறு வயது முதலே காதலித்து வந்தார். ஆனால் மதுமிதா, தமிழ் படிக்கவில்லை, நல்ல வேலையில் இல்லை என்பதற்காக, தமிழைத் திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொள்ளவில்லை. இந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக, கதையின் நாயகியான சரஸ்வதியைச் சந்திக்கிறார். மேலும், சந்திரகலா என்பவரது மகள் வசுந்தரா மற்றும் மகன் அர்ஜூன். வசுந்தரா மற்றும் கார்த்திக் இருவரும் காதலிக்கின்றனர். சரஸ்வதியின் ஐடியாவால் கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின், தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், சரஸ்வதி எம்பிஏ படித்தவள் என பொய் கூறி திருமணம் நடந்ததால், கோதை மிகவும் கோவப்படுகிறாள். எத்தனையோ பிரச்சனைகளுக்குப் பிறகு சரஸ்வதியைத் தன் மருமகளாக்கிக் கொள்கிறாள் கோதை. அதன் பிறகு, எதிரியாக அர்ஜூனின் குடும்பம் கோதை வீட்டுக்குள் நுழைகிறது. அதுவும், ராகிணியை மயக்கி காதலித்து திருமணம் செய்து பிறகு கோதை குடும்பத்தைப் பிடித்து, சொத்துக்களை அபகரித்துக் கொள்ள நினைக்கின்றனர். இந்த சூழ்நிலையில், அர்ஜூனின் சதி வலையில் சிக்கிக் கொண்ட தமிழ், சரஸ்வதியுடன் வீட்டை விட்டு வெளியேறி தனக்கென தனி ஒரு வாழ்க்கையைத் தொடங்கி விட்டார்.

ஆனாலும், தமிழுக்கு எத்தனையோ விதங்களில் அர்ஜூன் பிரச்சனை செய்து கொண்டு வருகிறான். அர்ஜூன் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து நடேசன் அர்ஜூன் மீது சந்தேகம் கொள்கிறார். இதன் பிறகு, அர்ஜூனின் சதியால், கோதையின் குடும்பத்திற்கு ஆபத்து நேருமா..? தமிழ் தன்னுடைய லட்சியல் வெல்வாரா..? என்பது குறித்த கேள்விகளுடன், விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோட்

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோட்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, விஜய் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்