Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனிருத் போட்ட பாட்டா இது? ரொம்ப மோசம்...! ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்!

UDHAYA KUMAR June 24, 2022 & 19:02 [IST]
அனிருத் போட்ட பாட்டா இது? ரொம்ப மோசம்...! ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்!Representative Image.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தாய்கெழவி பாடல் இன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகின் மிக பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். தனுஷ் அறிமுகம் செய்த இசையமைப்பாளரான அனிருத், அவரின் நெருங்கிய உறவினர். படிப்படியே முன்னேறி முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் அனிருத். 

விஜய் - அனிருத், அஜித் - அனிருத், சிவகார்த்திகேயன் - அனிருத், விஜய் சேதுபதி - அனிருத் என பல வித காம்போக்களில் ஹிட் கொடுத்தாலும் எப்போதுமே ஸ்பெஷல் தனுஷ் அனிருத் காம்போதான். இவர்கள் இணைந்தால் அந்த ஆல்பமே கன்பாஃர்மா ஹிட்டுதான். 3, விஐபி, மாரி, தங்கமகன் என தொடர்ந்து பல படங்களில் இணைந்த காம்போ பின்னர் சில காரணங்களால் தொடராமல் இருந்தது. இதனால் ரசிகர்களும் இவர்கள் எப்போது இணைவார்கள் என ஆர்வமாக காத்திருந்தனர்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் அனிருத் இசை என தெரிந்ததும் குதூகலமாகியுள்ளனர். இவர்களின் காம்போவில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது தாய் கெழவி பாடல். 

Director Mithran shares a new update on Dhanush's 'Thiruchitrambalam' |  Tamil Movie News - Times of India

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் இருக்கிறார்களாம். ராஷி கன்னா, நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் தனுஷுடன் இந்த படத்தில் நடித்துள்ளதால் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்