Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பக்கா மாஸ்.. தளபதி விஜயை வைத்து படம் தயாரிக்கும் 'தல' தோனி!!

Sekar October 12, 2022 & 15:51 [IST]
பக்கா மாஸ்.. தளபதி விஜயை வைத்து படம் தயாரிக்கும் 'தல' தோனி!!Representative Image.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தோனி எண்டர்டெயிண்மெண்ட் எனும் நிறுவனம் சார்பில் தளபதி விஜயை வைத்து படம் படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனி ஏற்கனவே தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார். 2023 ஐபிஎல்லோடு கிரிக்கெட்டிற்கு மொத்தமாக முழுக்கு போடும் திட்டத்தில் இருக்கும் தோனி, அதற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், முதல் படத்தை தமிழில் தளபதி விஜயை வைத்தே தயாரிக்கலாம் என முடிவு செய்து இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார். 

இந்த படங்கள் முடிந்த பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டாலும், அதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படங்கள் எல்லாம் முடிந்த பிறகு, விஜயின் 70வது திரைப்படத்தை தோனி தயாரிக்க உள்ளாராம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்