Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Thalaivar 169 story ரஜினிகாந்தின் கதை, கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதையில் நெல்சன் இயக்கும் புதிய படம்!

UDHAYA KUMAR June 07, 2022 & 14:20 [IST]
 Thalaivar 169 story ரஜினிகாந்தின் கதை, கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதையில் நெல்சன் இயக்கும் புதிய படம்!Representative Image.

கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்துள்ள நிலையில், அதற்கு சமமான அல்லது அதை முறியடிக்கும் வகையில் பிசினஸ் இருக்கவேண்டும் என முடிவு செய்துள்ளது தலைவர் 169 படக்குழு. ஏற்கனவே அண்ணாத்த திரைப்படம் சீரியல் போன்று இருப்பதாக கூறப்பட்டு எதிர்மறை விமர்சனங்கள் வந்த நிலையில், இந்த முறை எந்த மோசமான விமர்சனங்களையும் சம்பாதிக்க விரும்பவில்லை ரஜினி. பீஸ்ட் படத்தில் நெல்சன் செய்த சில விசயங்கள் பெரிய அளவில் காமெடியாக சித்தரிக்கப்பட்டதால், இயக்குநர் மீது தயாரிப்பு தரப்பு மிகுந்த வருத்தத்தில் இருந்ததாம். ரஜினிகாந்த் தான் சமாதானம் செய்து அவரையே வைத்து படம் எடுக்கலாம் என கூறியுள்ளார். 

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத்தான் இசை என்பது அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த படத்தில் நெல்சனுக்கு துணையாக இன்னொரு பிளாக்பஸ்டர் இயக்குநரும் இருப்பார் என கூறப்பட்டு வந்தது. 

Thalaivar 169 story

லோகேஷ் கனகராஜ் தனக்கு ரைட்டர்ஸ்பிளாக் ஏற்படும்போதும், மற்ற சில விசயங்களில் தெளிவு இல்லாத போதும் அவரது நண்பரான ரத்னாவிடம் கேட்பது போல, ரஜினிகாந்த் தனது படங்களில் கே எஸ் ரவிக்குமாரை வெல்விஸராக பயன்படுத்தவுள்ளாராம். மேலும் இந்த படத்தின் கதை ரஜினியுடையது எனவும் கூறுகிறார்கள். டார்க் காமெடி கதையை ஓரம் வைத்துவிட்டு, துப்பாக்கிகள், ஜெயில் என ஆக்ஷன் கதையில் நடிக்கவுள்ளாராம் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் கதையை திரைக்கதையாக்கி, மேற்பார்வையையும் கவனிக்க கே எஸ் ரவிக்குமாரை அணுகியுள்ளார் ரஜினிகாந்த். 

Thalaivar 169 shooting start date

கே எஸ் ரவிக்குமார், ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் சந்தித்து, ஸ்க்ரிப்ட் ஒர்க்கை முழுவதுமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். திரைக்கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையிலும், மற்ற அனைத்து நடிகர்களுக்கும் ஸ்கோப் இருக்கும் வகையிலும் படத்தை இயக்கவேண்டும் என நெல்சனிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம் ரஜினிகாந்த். வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திலேயே ஷூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

Thalaivar 169 sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கமாக நெல்சன் படங்களில் பாடல்களை எழுதுவார்.  பீஸ்ட் படத்தில் கூட விஜய்க்கு அரபிக் குத்து பாடலை எழுதியிருந்தார். அந்த பாடலை விஜய் பாட, வெறித்தனமான ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல் எழுதுவது மட்டுமின்றி கேமியோ ரோலிலும் நடிக்க உள்ளதாக தகவல் எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் பாடல் காட்சியில் நடிப்பார் என்பது தற்போதைய தகவலாக வெளிவந்துள்ளது. படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும். 

Thalaivar 169 salary

ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் மாதிரியே பேசப்படும் இன்னொரு விசயம் அவர்களின் சம்பளம். இந்நிலையில், தலைவர் 169 படத்துக்காக ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு என்பது பலரால் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. ஆனால், அண்ணாத்த படத்தின் தோல்விக்காக இந்த படத்தில் நடித்து கொடுக்கிறார் ரஜினி என்னும் பேச்சும் எழுந்துள்ளது. 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவார் ரஜினி என்பது கோடம்பாக்கத்தில் அரசல் புரசலாக எழுந்த தகவல்.

Thalaivar 169 sun pictures

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜூலையில் துவங்கும் இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. இதனாலேயே கே எஸ் ரவிக்குமாரையும் சேர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தயாரிப்பு தரப்பு மினிமம் கேரண்டி படத்தைத் தரவேண்டும் என்பதற்காக இந்த முடிவாம். 


Thalaivar 169 star cast | Thalaivar 169 cast | Thalaivar 169 169 heroine

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யாகிருஷ்ணன், முக்கிய வேடத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வில்லனாக ஷிவ்ராஜ்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

Thalaivar 169 budget

சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம். கூடுதலாக 50 கோடி வரை விளம்பரத்துக்காக செலவிடவும் திட்டமிட்டுள்ளதாம். எனினும் அவர்களது தொலைக்காட்சி, செய்திதாள், வானொலி, டிவிட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் ஹேண்டில்களிலேயே மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்துவிட முடியும் எனும்போது, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை போல. 

KEYWORDS:

Thalaivar 169 story
Thalaivar 169 shooting start date
Thalaivar 169 sivakarthikeyan
Thalaivar 169 salary
Thalaivar 169 stills
Thalaivar 169 sun pictures
Thalaivar 169 star cast
Thalaivar 169 cast
Thalaivar 169 heroine
Thalaivar 169 release date
Thalaivar 169 twitter
Thalaivar 169 director
Thalaivar 169 name
Thalaivar 169 bgm download
Thalaivar 169 movie
Thalaivar 169 budget
Thalaivar 169 update
Thalaivar 169 announcement
Thalaivar 169 actress name
Thalaivar 169 actors
Thalaivar 169 aishwarya rai
Thalaivar 169 announcement bgm thalaivar 169 download
Thalaivar 169 announcement ringtone download
Thalaivar 169 announcement video
Thalaivar 169 cast and crew
Thalaivar 169 cameraman
Thalaivar 169 director change
Thalaivar 169 latest update


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்