Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vikram vs Rolex கமல், சூர்யா இணையும் அடுத்த படத்தில்....! கமல்ஹாசன் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

UDHAYA KUMAR June 07, 2022 & 11:57 [IST]
Vikram vs Rolex கமல், சூர்யா இணையும் அடுத்த படத்தில்....! கமல்ஹாசன் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!Representative Image.

சூர்யாவுடன் இணையும் அடுத்த படத்தில் முழு அன்பையும் காட்டிவிடுவோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. 


ரஜினிகாந்தின் கதை, கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதையில் நெல்சன் இயக்கும் புதிய படம்! ஐஸ்வர்யா ராய் ஹீரோயின்?


கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனக ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் மிகப் பெரிய நடிப்பு பட்டாளமே இறங்கி அடித்துள்ளது. விஜய் சேதுபதி ஒரு பக்கம் மாஸான ஆக்டிங் என்றாலும் மறு பக்கம் பஹத் பாசில் கிளாஸான ஆக்டிங். கமல்ஹாசன் மாஸ் கிளாஸ் என கலந்து அடிக்கும் அட்டகாசமான படமாக இது அமைந்துள்ளது. முக்கியமாக பஹத் பாசில், கமல்ஹாசன் சந்திக்கும் இடைவேளை காட்சியானது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

விஜய் சேதுபதி நடிப்பின் அரக்கன் என்றால் நடிப்பின் நாயகன் சூர்யா கிளைமேக்ஸில் வந்து கலக்குகிறார். இப்படி படம் முழுக்க பாசிடிவ் நடிகர்களாக இருக்கிறார்கள். முழு நீள ஆக்ஷன் திரைப்படமான விக்ரம் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான போட்டியை உலக அளவில் நிகழ்த்தி வருகிறது. இந்த அனைத்து வரவேற்புகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் சூர்யா பற்றி பேசியிருப்பது,  அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைவது உறுதி எனும் வகையில் அமைந்துள்ளது. 

வணக்கம். தரமான திரைப்படத்தை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திடமான திறமையான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில், என்னையும் எங்கள் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். அனிருத், அன்பறிவு, பிலோமின், சதீஷ்குமார் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் இயங்கி உழைத்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம். தம்பிகள்  விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், செம்பன் வினோத் என வீரியமிக்க நடிகர் படை வெற்றியின் முக்கிய காரணங்கள். கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிரவைத்த என் அருமைத் தம்பி, சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன். 

இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு சினிமா மேலும் என் மேலும் இருக்கும் அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் ஊழியன் உங்கள் நான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்