Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thalapathy 66 First Look வெளியானது ! அட ச்சை.... இதுதான் டைட்டிலாம்! ரசிகர்கள் ஏமாற்றம்!

UDHAYA KUMAR June 21, 2022 & 18:20 [IST]
Thalapathy 66 First Look வெளியானது ! அட ச்சை.... இதுதான் டைட்டிலாம்! ரசிகர்கள் ஏமாற்றம்!Representative Image.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியுடன் இணைந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். குடும்பங்கள் கொண்டாடும் கதை என்று  இயக்குனர் ஏற்கனவே கூறிவிட்ட நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லாததால், ரசிகர்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை.  தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனக் கூறப்படுவதால் நேரடியாக அந்த படத்தை காண காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதற்கான ட்ரீட்டாக தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை 6 மணி 1 நிமிடத்திற்கு போஸ்டர் வெளியானது. இதனை உடனடியாக டிவிட்டரில் பகிர்ந்து அதை வைரல் ஆக்க விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பர்ஸ்ட் லுக் இல்லாததால் அதிருப்தியில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். 

படத்துக்கு வாரிசு எனும் பெயரே வைக்கப்பட்டுள்ளது. இது மேலும் விஜய் ரசிகர்களை வருத்தப்படுத்தியுள்ளது. இப்படித்தான் புதிதாக ஏதாவது செய்தாலே அதன் வெற்றி கேள்விக்குறியாகியிருப்பதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். 

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்