Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

thalapathy 66 heroine தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக தனுஷ் ஹீரோயின்! அப்ப ரஷ்மிகா?

UDHAYA KUMAR May 25, 2022 & 11:29 [IST]
thalapathy 66 heroine தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக தனுஷ் ஹீரோயின்! அப்ப ரஷ்மிகா?Representative Image.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இன்னமும் பெயரிடாததால் அதனை  தளபதி 66 என அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குவதற்காக தெலுங்கு பட இயக்குநர் வம்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இந்த படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா நடித்திருப்பதாகவும், இதுவரை இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் ஒரு சண்டைக் காட்சி ஆகியவை எடுத்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் படத்தில் தனுஷ் பட கதாநாயகி ஒப்பந்தமாகியிருப்பதாகவும் அவர்தான் விஜய் ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி வருகிறது. அப்போது ரஷ்மிகா என்ன செய்கிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

விஜய்யை வைத்து வம்சி என்ன செய்ய போறாரோ என விஜய் ரசிகர்கள் பயத்துடன் காத்திருக்கின்றனர். தளபதி 66 படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற பட்டியல் வெளியானதும் ஒருவித பயம் தொற்றிக் கொண்டது போல் தெரிகிறது. காரணம் இத்தனை பேர் நடித்தால் விஜய் நடிக்க ஸ்பேஸ் இருக்குமா, விக்ரம் படத்தைப் போல் விஜய் இந்த படத்தில் கேமியோ பண்ணுகிறாரா என விசாரிங்க என்பது போல  பலரும் கிண்டல் செய்து வந்தனர். 

இந்நிலையில்தான், தனுஷின் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரைன் பிர்ஷாடா நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் ரெண்டு வேடத்தில் நடிக்கிறார் என்றும் அதில் முதல் விஜய்க்கு ரஷ்மிகாவும் இரண்டாவது விஜய்க்கு மெஹ்ரினும் ஜோடி எனவும் தகவல் பரவி வருகிறது. 

எது உண்மை.. யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது விரைவில் அப்டேட்டாக வெளிவரும் என கூறப்படுகிறது. வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் அடுத்தடுத்த சில அப்டேட்கள் வெளிவரும் எனத் தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்