Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அய்யய்யோ... தளபதி 66 ல விஜய் லுக்.... இப்படி ஆயிடிச்சே!

UDHAYA KUMAR June 09, 2022 & 19:11 [IST]
அய்யய்யோ... தளபதி 66 ல விஜய் லுக்.... இப்படி ஆயிடிச்சே!Representative Image.

தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஹைதரபாத்தில் துவங்கி, பின் சென்னையிலும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தளபதி விஜய்யின் லுக் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் ஒருவித அதிருப்தியில் உள்ளனர். 

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது தளபதி விஜய்.  நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து, இப்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க, அவர்களுடன் இன்னும் பல நட்சத்திரங்களும் படத்தில் இருக்கின்றனர். தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் லுக் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தைப் பார்த்தால் தெலுங்கு படம் ஒன்றைப் போல இருப்பதாகவும், வம்சி நம்மை மோசம் செய்துவிட்டார் எனவும் விஜய் ரசிகர்கள் சிலர் வருத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சிலரோ விஜய் இவ்ளோ யங்கா இருக்காரே என புகழ்ந்து வருகின்றனர். படம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் விரைவில் படம் ரிலீஸுக்கு தயாராகும் என கூறப்படுகிறது. 

தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி படம் பற்றிய அறிவிப்புடன் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது. இதே நாளில் தளபதி 67 குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்