Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லோகேஷின் அடுத்த படத்தில் வில்லனாக விஜய்! மாஸ் அப்டேட் ப்ரோ!

UDHAYA KUMAR June 07, 2022 & 18:01 [IST]
லோகேஷின் அடுத்த படத்தில் வில்லனாக விஜய்! மாஸ் அப்டேட் ப்ரோ!Representative Image.

விக்ரம் படத்தில் உலகநாயகனுடன் இணைந்து வில்லன் வேடத்தில் ஒரு சில நிமிடங்கள் தோன்றினார் சூர்யா. இதைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் அடுத்த படத்தில் வில்லனாக விஜய் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் தளபதி 66 திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த படம் உருவாகும் என தெரிகிறது. 

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை இயக்கி லோகேஷ் கனகராஜ் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார். படம் உலக அளவில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் இயக்குநர் லோகேஷுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரும், நடிகருமான கமல்ஹாசன். அதுமட்டுமின்றி அவரது உதவி இயக்குநர்கள் 13 பேருக்கும் பைக் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் லோகேஷ் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  விக்ரம் படத்தைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை இயக்கவுள்ளது இந்த குழு. 

தளபதி விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததும் அடுத்து லோகேஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அதாவது கேங்க்ஸ்டராக நடிக்கவுள்ளாராம். ஆனாலும் இவர்தான் படத்தின் கதாநாயகனாக இருப்பார். இப்படி ஒரு கதையை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கிவிட்டார் லோகேஷ். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்