Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தளபதி 67 பட மாஸ் லுக்கில் விஜய்.. புத்தம் புதிய புகைப்படங்கள்!

UDHAYA KUMAR Updated:
தளபதி 67 பட மாஸ் லுக்கில் விஜய்.. புத்தம் புதிய புகைப்படங்கள்!Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படமான தளபதி 67 படத்தில் விஜய்யின் லுக் புகைப்படங்கள் மிக சாதாரணமாக வெளியாகி வருகிறது. ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படத்துக்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கும் என கூறுகிறார்கள். அது என்ன காரணம் வாருங்கள் தெரிந்து கொள்வோம். 

தளபதி 67ல் விக்ரம் நடிக்கிறார். பஹத் பாசில் நடிக்கிறார், கார்த்தி நடிக்கிறார் சூர்யா நடிக்கிறார் கமல் நடிக்கிறார் என பல செய்திகள் உலா வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ரசிகர்களே யூகிக்கும் அல்லது கொளுத்திப் போடும் செய்தியாக இருக்கின்றன.  சில மீடியாக்களும் இதில் குளிர் காய்ந்து வருகின்றன. இப்போது வரை இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக மட்டுமே தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவே உறுதியான தகவலாக இருக்கிறது. 

கமல்ஹாசனை முதல் முறையாக விக்ரம் படத்தில் இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து  இரண்டாவது தடவையாக விஜய்யை இயக்கவுள்ளார். விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருப்பதால் தளபதி 67 திரைப்படம் அதிக அழுத்தத்தை லோகேஷுக்கு தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

இந்த மாதம் 4ம் தேதி சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு, படிப்படியே வளர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறது படக்குழு. அங்கே மன்சூர் அலிகானுக்கான காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது இந்நிலையில், நாளை தளபதி 67 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட இருப்பதாக ஒரு தகவல் இணைய தளத்தில் சுற்றி வருகிறது. அதனுடன் விஜய்யின் புதிய லுக் என சில புகைப்படங்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. 

விஜய் தற்போது வைத்திருக்கும் லுக் என்பது டைட்டில் டீசர் எடுக்கப்பட்ட லுக் எனவும் படத்துக்கு வேறொரு லுக்கை மாற்றுவார்கள் என்பதால்தான் விஜய் சாதாரணமாக அனைத்து ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்