Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 பர்ஸ்ட் லுக்கை கல்லூரியில் வெளியிடுகிறார்களா?

UDHAYA KUMAR Updated:
தளபதி 67 பர்ஸ்ட் லுக்கை கல்லூரியில் வெளியிடுகிறார்களா?Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படமான தளபதி 67 படத்தின் டைட்டில் டீசரை பிரபல கல்லூரி ஒன்றில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசனை முதல் முறையாக விக்ரம் படத்தில் இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து எடுத்து வைக்கும் அடி கொஞ்சம் பெரியதாகவே இருக்கும் என மிகவும் சிறப்பாகவே எடுத்து வைக்கிறார். இந்த முறை இரண்டாவது தடவையாக விஜய்யை இயக்கவுள்ளார். விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டு மடங்கு எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது தளபதி 67 திரைப்படம். இந்த மாதம் 4ம் தேதி சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு,  நல்லபடியாக நடந்துமுடிந்துள்ளது. 

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறது படக்குழு. அங்கே மன்சூர் அலிகானுக்கான காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது இந்நிலையில், நாளை தளபதி 67 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட இருப்பதாக ஒரு தகவல் இணைய தளத்தில் சுற்றி வருகிறது. 

தளபதி 67ன் டைட்டில் டீசர் நாளை மதியம் 1.30 மணி அளவில் கோயம்புத்தூர் PSG கல்லூரியில் வைத்து வெளியிடப்படும் என கூறப்படும் அந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் எங்கேயும் வெளியிடப்படவில்லை. 

இதுகூடவே தளபதி 67ல் விக்ரம் நடிக்கிறார். பஹத் பாசில் நடிக்கிறார், கார்த்தி நடிக்கிறார் சூர்யா நடிக்கிறார் கமல் நடிக்கிறார் என பல செய்திகள் உலா வருகின்றன. இப்போது வரை இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக மட்டுமே தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவே உறுதியான தகவலாக இருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்