Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தளபதி 67 முக்கிய வேடத்தில் அவர்... அவரே சொன்ன உண்மை!

UDHAYA KUMAR Updated:
தளபதி 67 முக்கிய வேடத்தில் அவர்... அவரே சொன்ன உண்மை! Representative Image.

லோகேஷின் அடுத்த படத்தில் தான் நடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார் பிரபல இயக்குநர். சமீபத்தில் நடைபெற்ற ரவுண்ட் டேபிள் தமிழ் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

பிரபல யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டனர். அதில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், ஹலிதா ஷமீம், ஏஜிஎஸ் அர்ச்சனா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய இயக்குநர் கௌதம், தான் லோகேஷ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். இதனைக் கூறுவதற்கு முன் லோகேஷைப் பார்த்து ஒருமுறை கேட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால் மகிழ்ச்சியுடன் இதனை அறிவித்தார். ஆனால் அது என்ன படம் என்பதைக் கூற வில்லை. 

லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பது தமிழ்நாடு கடந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா வரைக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தயாரிப்பு தரப்பு முறையாக அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்