Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Thalapathy 67 villains ஆறு பேரும் யார் யார் தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
Thalapathy 67 villains ஆறு பேரும் யார் யார் தெரியுமா?Representative Image.

அர்ஜூன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், ரக்ஷித் ஷெட்டி ஆகிய 6 பேர்தான் தளபதிக்கு எதிராக நடிக்கும் வில்லன்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இன்னொரு பிரபல நடிகரும் இந்த படத்தில் இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. அவர் மலையாள திரைத் துறையைச் சேர்ந்தவர் என்கிறார்கள். 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக சீரியல் போல இருக்கிறது, சுமாராக இருக்கிறது என கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் வசூலில் எந்த பாதிப்பும் எழவில்லை. வழக்கமான பொங்கல் திரைப்படங்களைப் போலவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படையெடுத்து வருகின்றனர். 

வாரிசு படத்தைத் தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியிலேயே தளபதி விஜய் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் புதிய திரைப்படமான தளபதி 67 படத்தில் ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் ஆனால் 6 வில்லன்கள் இருக்கிறார்களாம். அப்படி ஒரு கதையைப் பிடித்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். 

தளபதி 67ல் நடித்து வரும் நடிகர்கள் யார் யார் என்பதை பலரும் கணித்து வருகின்றனர். அதே நேரம் கௌதம் மேனன் நடிப்பதை லோகேஷ் கனகராஜே கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். மிஷ்கினும் படத்தில் இருக்கிறார் என்பதை மிஷ்கினே வாயைத் திறந்து பேசிவிட்டார். இப்போதைக்கு தளபதி 67 படத்தில் விஜய், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பது 100 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்