Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹிந்திக்கு செல்லும் விஜய்! உண்மையா பொய்யா?

UDHAYA KUMAR June 23, 2022 & 19:20 [IST]
ஹிந்திக்கு செல்லும் விஜய்! உண்மையா பொய்யா?Representative Image.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய்யும் நடிக்கிறார் என்கிற தகவலால், விஜய் ரசிகர்கள் சிலர் குஷியாகியுள்ளனர். சிலரோ இது வதந்தியாகத்தான் இருக்கும் என கூறியுள்ளனர். அப்படி நடித்தாலும் ஒரு பாடல் காட்சியில் சில நொடிகள் தோன்றுவார் என பலரும் பேசி வருகின்றனர். 

ஷாருக்கான் ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபுவும் ஷாருக்கானுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்யவுள்ளார். இந்த படத்தின் பெயருடன் வெளியீட்டு தேதியும் கடந்த வாரம் வெளியானது. 

ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறதாம். ஷாருக்கானின் சொந்த நிறுவன படம் என்பதால் பார்த்து பார்த்து செய்கிறார்களாம்.  கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது.  கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. கைவசமுள்ள 3 திரைப்படங்களில் எது முதலில் வெளியாகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

இதனிடையே மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்திலும் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் வருகிற ஜூலை 1ம் தேதி வெளியாகவுள்ளது.  மேலும் அயன் முகர்ஜி ப்ரமாஸ்த்ரா படத்திலும் நடித்துள்ளார் ஷாருக்கான். இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டுங்கி படமும், அஸ்தோஸ் கௌவரிகர் இயக்கத்தில் ஆபரேசன் குக்ரி படமும் கைவசமுள்ளது. பின்னர்தான் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் ரிலீசாகும். 

2023ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ள ஜவான் திரைப்படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் 10 நிமிட காட்சியில் நடிப்பார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அட்லியிடம் கொண்ட நட்பு காரணமாக அவர் கண்டிப்பாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்