Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆதிபுருஷ் பார்க்க அனுமன் வந்தாரா..? - ஹைதராபாத் தியேட்டரில் ரசிகர்கள் ஆராவாரம்!

Aruvi Updated:
ஆதிபுருஷ் பார்க்க அனுமன் வந்தாரா..? - ஹைதராபாத் தியேட்டரில் ரசிகர்கள் ஆராவாரம்!Representative Image.

ஹைதராபாத்: ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் குரங்குகள் வந்ததை அடுத்து ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கூறி ஆராவாரம் செய்தனர்.

இந்திய அளவில் பிரபலமான நடிகராக விளங்கும் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஓம் ராவத் இயக்கியிருக்கும் படத்தில் சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு பெரும்பாலான ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

படத்திலிருந்து முதல் டீசர் வெளியானபோது ரசிகர்கள் அதை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக படத்தின் க்ராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இல்லை என கூறியதை அடுத்து கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணியில் இறங்கியது படக்குழு. இதன் காரணமாக ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போனது. கிராஃபிக்ஸுக்கான வேலையை முடித்த பிறகு இரண்டு ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. இரண்டு ட்ரெய்லர்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை அனுமனுக்கு ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்தது. ஏற்கனவே கிராஃபிக்ஸ் காட்சிகளை கழுவி ஊற்றிக்கொண்டிருந்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் படக்குழுவின் இந்த அறிவிப்பையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இருந்தாலும் எடுத்த முடிவில் ஆதிபுருஷ் படக்குழு உறுதியாக நின்றது.

படம் ரிலீஸ்:

படக்குழு அறிவித்தபடி படமானது இன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலோடு திரையரங்குகளுக்கு செல்கின்றனர். அதேசமயம் தமிழ்நாட்டில் படத்துக்கான டிக்கெட் விற்பனை ரொம்பவே டல்லடித்திருப்பதாக கூறப்படுகிறது.

குரங்குகள் எண்ட்ரி:

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஆதிபுருஷ் படம் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது அந்த திரையரங்குக்கு குரங்குகள் வந்து சிறிது நேரம் இருந்தன. இதனையடுத்து படத்தை பார்க்க அனுமன் வந்துவிட்டதாக கூறி அங்கிருந்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கத்தி ஆராவாரம் செய்தனர். தற்போது இந்த நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்