Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி விஜய்க்கு வயது 21.. கௌதம் மேனனின் அட்டகாசமான கதை!

UDHAYA KUMAR July 01, 2022 & 18:46 [IST]
தளபதி விஜய்க்கு வயது 21.. கௌதம் மேனனின் அட்டகாசமான கதை!Representative Image.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்கத் துவங்கியுள்ளார். கெட்டப்பில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் தனக்கேற்ப வித்தியாசமான கதைகளைத் தேர்ந்துடுத்து நடிக்கிறார் விஜய். 

 பீஸ்ட் திரைப்படத்தில் தனது மேனரிசத்தை கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருந்தார், மாஸ்டர் திரைப்படத்திலும் வித்தியாசமாக நடித்திருந்தார். தனது அடுத்த படத்தில் இயக்குநராக வம்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார். 

இதற்கிடையில், மீண்டும் விஜய் - கௌதம் மேனன் இணைவது பற்றிய பேச்சு இணையதளத்தில் எழுந்துள்ளது. கௌதம் மேனன் விஜய்யை வைத்து யோகன் அத்தியாயம் ஒன்று எனும் படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தின் கதைப்படி விஜய் முதல் 20 நிமிடங்கள் 21 வயது இளைஞராக தோன்றுவதாக இருந்ததாம். 

ஆனால் இதனை விஜய் இப்போது செய்யமுடியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்பத்தின் உதவியால் எதுவும் சாத்தியமே.  மேலும் அஜித்தா விஜய்யா எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு கௌதம் மேனன் விஜய்யைத் தேர்ந்தெடுத்தது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கௌதம் மேனன் விரைவில் விஜய்யிடம் சம்மதம் வாங்கி யோகன் திரைப்படத்தை துவங்குவார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்