Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Russo Brothers About Dhanush: நாங்கள் தனுஷ் ரசிகர்கள்...ட்விட்டர் ஸ்பேசில் பேசிய ரூசோ பிரதர்ஸ்..!

madhankumar May 25, 2022 & 18:48 [IST]
Russo Brothers About Dhanush: நாங்கள் தனுஷ் ரசிகர்கள்...ட்விட்டர் ஸ்பேசில் பேசிய ரூசோ பிரதர்ஸ்..!Representative Image.

அவெஞ்சர்ஸ் படங்களான கேப்டன் அமெரிக்கா, சிவில் வார், எண்டு கேம், போன்ற படங்களை இயக்கி உலக அளவில் புகழ்பெற்ற இயக்குனர்கள் தான் ஜோ ரூசோ, மற்றும் ஆண்டனி ரூசோ. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் படமான "தி கிரே மேன்" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படம் இதுதான். இந்திய மதிப்பில் இப்படத்திற்கு ரூ. 1200 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்ம்ஸ், ஆகியோர் நடித்துள்ளனர். இதில் கிரிஷ் எவான்ஸ் அவெஞ்சர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்களாக மாற்றிவைத்துள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்ப கால பணிகள் நடந்துகொண்டிருக்கையில் இப்படத்தில் நடிக்க கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இப்படத்தில் நடிப்பதற்காக  கடந்த ஆண்டு தனுஷ் அமெரிக்கா சென்றார். பின்னர் தனது பகுதியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர் தற்போது, நானே வருவேன், திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்ததாக தமிழ் தெலுங்கில் தயராகும் வாத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதனிடையே இந்த தி கிரே மேன் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் தனுஷை எவ்வாறு காட்டப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் வெறும் 2 நொடிகள் மட்டுமே அவரின் காட்சிகள் வந்தது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இருந்தாலும் பரவாயில்லை இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் ஹாலிவுட்டின் உச்ச நடிகர்களுடன், மற்றும் உச்ச இயக்குனர்கள் படத்தில் தனுஷ் நடிப்பது இந்திய சினிமாவிற்கு பெருமை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தனுஷ் குறித்து இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ்:

இதனிடையே தனுஷ் ரசிகர்கள் மற்றும் இந்திய சினிமா ரசிங்கர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நேற்று நடந்த ட்விட்டர் ஸ்பேசில் பேசிய ரூசோ பிரதர்ஸ், "நாங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள், அவர் இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் ஆவார், அவரின் கதாபாத்திரத்தை அவருக்காகவே எழுதியுள்ளோம், அவரின் அசத்திய நடிப்பு அருமையாக உள்ளது மேலும் அவருக்கு முக்கியமான பிரமிக்கவைக்கும் இரண்டு ஆக்சன் காட்சிகள் உள்ளன. என கூறியுள்ளனர். மற்றும் இந்த தி கிரே மேன் படம் நன்றாக போகும் பட்சத்தில் தனுஷின் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து தனியாக ஒரு படம் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இது மிகப்பெரிய வார்த்தை, மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளோம், என கூறி ட்விட்டர் பக்கத்தில் ஹாஸ்டாகுகளை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். தி கிரே மேன் படத்தின் பதிவுகள் எங்கு இருந்தாலும் அதில் தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் தி கிரே மேன் படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. மேலும் கூடுதல்தகவலாக குறிப்பிட்ட திரையரங்குகளில் படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்